திண்டிவனம்: திண்டிவனத்தில் சுற்றி திரிந்த நான்கு சிறுமிகளை, சைல்டு லைன் அமைப்பு மற்றும் போலீசார் மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
திண்டிவனம் பகுதியில் நான்கு குழந்தைகள் சுற்றி திரிவதாக சைல்டு லைன் அமைப்பிற்கு புகார்கள் சென்றது. இதையடுத்து, சைல்டு ைலன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதி, திண்டிவனம் மயிலம் ரோட்டில், உள்ள டீக்கடை அருகே 3 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 4 பேரை மீட்டு, திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.போலீசார் அந்த சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், மரக்காணம் தாலுகா ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், பெற்றோருக்கு தெரியாமல் வந்துவிட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அந்த சிறுமிகளின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று மதியம் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த பெற்றோர்கள் மற்றும் அந்த சிறுமிகளிடம், சப்இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) புனிதவள்ளி, தனிப்பிரிவு ஏட்டு ஆதி, ஏட்டுக்கள் ராதா, சற்குணம், கோமதி ஆகியோர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.