விழுப்புரம்: வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி, விழுப்புரத்தில் வழக்கறிஞர்கள் கோர்ட் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.விழுப்புரம் பார் அசோசியேஷன் சங்க உறுப்பினர் வழக்கறிஞர் நடராஜன் மற்றும் அவரது சகோதரர் வழக்கறிஞர் துளசிங்கம் ஆகியோர் மீது வளவனுார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், வழக்கறிஞர் நடராஜன் கொடுத்த புகாரில் எதிரிகளை கைது செய்யக்கோரியும் நேற்று விழுப்புரம் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.