அன்னுார்:மத்திய அரசு அறிவித்துள்ள, புதிய தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து, அன்னுார் வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில், கையெழுத்து இயக்கம், ராம் நகரில் நடந்தது.பா.ஜ., வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''ஒன்றியத்தில், 5,000 பேரை சந்தித்து, தேசிய கல்விக் கொள்கை குறித்து விளக்கி, கையெழுத்து பெற திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.இளைஞரணி வடக்கு மாவட்ட தலைவர் யோகேஷ் பேசுகையில், ''வடக்கு மாவட்டத்தில், ஒரு லட்சம் பேரிடம், கையெழுத்து பெற உள்ளோம்,'' என்றார். இளைஞரணி மாவட்ட பொது செயலாளர் தினேஷ், பா.ஜ., வடக்கு ஒன்றிய தலைவர் சத்யராஜ், இளைஞரணி தலைவர் தனீஷ் மற்றும் மகளிரணியினர் பங்கேற்றனர். ராம்நகர் பகுதியில், ஒரே நாளில், 500 பேரிடம் கையெழுத்து பெறப்பட்டது.