திறந்த வெளியான ரோடுதிறந்த வெளி கழிப்பிடம் இல்லா பகுதியாக மாற்ற பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தாலும் இப்பகுதியில் இன்னும் இந்த அவலம் தொடர்கிறது.
இப்பகுதியை சுற்றிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சுகாதார வளாகங்கள் செயல்பாட்டில் இருந்தாலும் குடியிருப்புகள் அருகே ரோட்டோரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். கேட்டால் தேவையற்ற சச்சரவுகள் தொடர்கின்றன.ஆனந்த வள்ளி முத்து, குடும்பத்தலைவிமாடு, பன்றி வதை முகாம்ஊரணி உட்பகுதியில் சிலர் பன்றிகளை வளர்ப்பதுடன் அவற்றை வீடுகள் அருகே கொன்று தீயிட்டு வாட்டுகின்றனர். இதில் எழும் துர்நாற்றத்தால் குமட்டல் ஏற்படுகிறது.
இதே போல் வீடுகள் அருகே மாடுகளை கொன்று விற்பனை செய்கின்றனர். சனிக்கிழமை இரவில் தொடங்கி மறுநாள் வரை இந்த அவலம் தொடர்கிறது. இதன் கழிவுகளை ஓடையில் போடுவதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.பரமேஸ்வரி, குடும்பத்தலைவி
பள்ளத்தை சரி செய்யுங்க
பாரதியார் தெரு காளியம்மன் கோயில் அருகில் உள்ள முச்சந்தியில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளம் இரண்டு மாதங்கள் கடந்தும் மூடப்படவில்லை. தினமும் வாகனங்கள் கடந்து செல்லும் போது இடையூறு ஏற்படுவதுடன் கன ரக வாகனங்கள் செல்ல முடிவதில்லை. திருப்பதி ராஜ், ஜவுளி வியாபாரம்