திருவெண்ணெய்நல்லுார்: மது பாட்டில் விற்ற முதியவரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சின்னசெவலை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.அந்த பகுதியில் சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில்போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைசெய்தனர்.விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த காமராஜ்,55; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.