விழுப்புரம் : பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், பொய்யப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, எருமனந்தாங்கலை சேர்ந்த முருகன் மகன் சுபாஷ், 19; என்பவர் கையில் தடியுடன் பொதுமக்களை அச்சுறுத்தியும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது தெரியவந்தது.இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, சுபாைஷ கைது செய்து விசாரிக்கின்றனர்.