மயிலம் : மயிலம் அடுத்த ரெட்டனை ஹோலி ஏஞ்சல் பள்ளியில் தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
மயிலம் அடுத்த ெரட்டணை ஹோலி ஏஞ்சல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி., தேவநாதன் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் அரசகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரெட்டணை தூய்மை பணியாளர்களின் கொரோனா பணியை பாராட்டி பேசி நினைவு பரிசு வழங்கினார்.திண்டிவனம் டி.எஸ்.பி., கணேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், கிராம முன்னாள் மாணவர்கள் சமூக இடைவெளி கடைபிடித்து முக கவசம் அணிந்து விழாவில் கலந்து கொண்டனர்.