சிவகாசி:மாவட்டத்தில் அனைத்து தொழிற்சாலை உரிமம் புதுப்பிக்க அக்.,31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சிவகாசி தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் வேலுமணி கூறியதாவது: தொழிற்சாலை உரிமம்
https://dish.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அக். 31க்குள் புதுப்பிக்க வேண்டும். தாமதமாக விண்ணப்பித்தால் 10, 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.
புதிய தொழிற்சாலை பதிவு செய்தல், உரிமம் திருத்தம், உரிமம் மாற்றம், ஒப்பந்த தொழிலாளர் சட்டம், வெளி மாநில தொழிலாளர் பதிவு சான்றுகளுக்கு வரைவோலை, சலான் மூலம் உரிய கட்டணம் செலுத்தி இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம். அதன் 3 நகல்கள், வரைவோலை, சலானுடன் இணைத்து அனுப்ப வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.