நீராவி சலவையில் 'அயர்ன்' விருதுநகரில் கலக்கும் இன்ஜினியர் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
நீராவி சலவையில் 'அயர்ன்' விருதுநகரில் கலக்கும் இன்ஜினியர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 அக்
2020
01:19

விருதுநகர்:துணியை துவைத்தவர்களை காட்டிலும் அதை 'அயர்ன்' செய்யும் தொழிலாளர்களுக்கு தான் எப்போதும் மவுசு.



வெள்ளை சட்டைக்கு கஞ்சி சலவை இல்லையென்றால் கூட்டத்தில் மதிப்பு குறைந்து விடும் என்பது தான் நிதர்சனமான உண்மை. ஊரின் பல அரசியல் கரைவேட்டிகளை மிடுக்காக காட்டியதில் சலவை செய்வோருக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் விருதுநகர் சத்திரரெட்டியப்பட்டியை சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் சத்தியசீலன் புதுவிதமாக நீராவி சலவை மூலம் 'அயர்ன்' செய்து பெருவாரியான மக்களின் கவனத்தை பெற்று வருகிறார்.



கரி, மின்சாரத்தில் 'அயர்ன்' செய்யும் போது நுால் பலவீனமடைகிறது என வல்லுனர்கள் கூறுகின்றனர். இதே நீராவியில் அயர்ன் செய்யும் போது நுால் எவ்வித பலவீனமும் அடையாமல் புத்துணர்வுடன் உள்ளது. 20 லிட்டர் கொண்ட பாய்லரில் நீர் சூடாக இதன் நீராவி அயர்ன் பாக்ஸ் மூலம் வெளியேற்றப்படுகிறது.



இதோடு 'வேக்குவம்' வைத்து சூடு உறிஞ்சப்படுவதால் உடனடியாக துணி குளிர்விக்கப் படுகிறது. இதனால் பழைய துணிகளும் புது பொலிவுடன் காட்சி அளிக்கிறது. பட்டு, கதர் ஆடைகள், வெள்ளை சட்டைகள், அலுவலக ஆடைகள் இவற்றின் மூலம் புதிய ஆடை போல் காட்சி அளிக்கின்றன.



இதை செய்து வரும் சத்திய சீலன் மெக்கானிக்கல் இன்ஜினியர். சொந்த ஊரில் சுய தொழில் துவங்க திட்டமிட்ட இவர், 'அயர்ன்' தொழிலை கையில் எடுத்தார். இருப்பினும் புதுமையுடனும், அதே நேரம் தரமான முறையிலும் சலவை செய்வது குறித்து நண்பர்களுடன் கலந்துரையாடினார்.



அதன்படி கோயம்புத்துாரில் ஒருவர் நீராவி சலவை செய்வதை அறிந்து அதன்படி சத்திரரெட்டியபட்டியில் நீராவி சலவை கடையை துவங்கினார். சாதாரண கடைகளில் வாங்குவது போன்றே ஒரு சட்டைக்கு ரூ.7 வாங்குகிறார். தொடர்புக்கு 78110 45217.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X