சின்னசேலம் :சின்னசேலம் அருகே மனைவி, மகன் கடத்தப்பட்டதாக, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த இந்திலி கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் ரவிக்குமார், 34; இவரது மனைவி அனிதா,26; இரு குழந்தைகள் உள்ளனர். ரவிக்குமார், ஆத்துாரில் உள்ள தனியார் வங்கியில் கலெக்ஷன் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார்.அனிதா, அதே ஊரை சேர்ந்த பரமசிவம் மகன் மணிகண்டன், 26; என்பவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனை ரவிக்குமார் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர்.நேற்று முன்தினம் மாலை, வேலை முடிந்து ரவிக்குமார் வீடு திரும்பிய போது, மனைவி மற்றும் ௫ வயது மகனை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. தனது மனைவி மற் றும் மகனை மணிகண்டன் கடத்திச் சென்று விட்டதாக, சின்னசேலம் போலீசில் ரவிக்குமார் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, அனிதா உள்ளிட்ட 3 பேரையும் தேடி வருகின்றனர்.