விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் ஊழியர்களின் ரத்ததான முகாம் நடந்தது.
விக்கிரவாண்டி வட்டார அரசு மருத்துவ மனை மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, உளுந்துார் பேட்டை எக்ஸ்பிரஸ் லிட் இணைந்து நடத்திய ரத்ததான முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமை தாங்கினார். டோல் பிளாசா திட்ட மேலாளர் முத்து அண்ணாமலை, பி.ஆர்.ஓ., ராஜசேகர், மேலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன் வரவேற்றார்.வட்டார மருத்துவமனை டாக்டர் ராமகிருஷ்ணன், ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மோனிஷா ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் டோல் பிளாசா பணியாளர்களிடமிருந்து 40 யூனிட் ரத்த தானம் பெற்றனர் . ரத்த தானம் வழங்கியவர்களுக்கு டாக்டர் ராமகிருஷ்ணன் சான்றுகள் வழங்கி பாராட்டினார்.
ரத்ததான கவுன்சிலர்கள் அசோக்குமார், கோமதி, லேப் டெக்னிஷியன் தமிழரசி, செவிலியர் சசிகலா, சுகாதார ஆய்வாளர் ரமணி,டோல் பிளாசா கண்ணப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.