மேல்மலையனுார் ஏரி துார்வார ட்ரோன் மூலம் கணக்கெடுக்கும் பணி தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2020
22:51

செஞ்சி : மேல்மலையனுார் ஏரியை துார்வரவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ட்ரோன் கேமரா மூலம் அளவெடுக்கும் பணி நடந்தது.



விழுப்புரம் மாவட்டத்தில் பனமலை, மேல்மலையனுார் ஏரிகள் மிகப்பெரிய ஏரிகள். மேல்மலையனுார் ஏரி ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்டது. 10 கி.மீ., பாரப்பளவில் ஐந்து கிராம எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. வீடூர் அணையை விட மேல்மலையனுார் ஏரி பெரியது. இந்த ஏரியில் இருந்தே சங்கராபரணி ஆறு துவங்குகிறது. பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு அகற்றாமல் இருப்பதால் 40 சதவீதம் அளவிற்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன.ஏரி நீர் பிடிப்பு பகுதியிலும் கட்டடங்களை கட்டி உள்ளனர்.



ஆக்கிரமிப்புகளை அகற்றவும், துார் வாரவும் பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக முதல் கட்டமாக கணக்கெடுப்பு பணி நடந்தது. செஞ்சி பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு உதவி பொறியாளர் கனகராஜ் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி.,யை சேர்ந்த பயிற்சி விஞ்ஞானிகள் சிவராமன், தன்வந்த்ரி, ராம் ஆகியோர் ட்ரோன்கேமரா மூலம் கணக்கெடுக்கும் பணியை செய்தனர்.இதில் ஏரியின் எல்லைகள், ஆக்கிரமிப்பு பகுதி, துார்வாருவதற்கு ஏரியின் மட்டம் ஆகியவற்றை கணக்கெடுத்தனர்.



ஏரியின் எந்ததெந்த பகுதிகள் ஆக்கிரமிப்பில் உள்ளன என்பதை நிளஅளவை பிரிவினரின் துணையின்றி கண்டறிய புதிய ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர்.இதை கொண்டு ஏரியில் ஆக்கிரமிப்புகளை கண்டறிந்தனர். அளவெடுக்கப்பட்டதன் அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்து, அனுமதி பெற்று விரைவில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், துார்வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி பொறியாளர் கனகராஜ் தெரிவித்தார்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X