வண்ணாரப்பேட்டை : கஞ்சா விற்ற தம்பதி உட்பட ஐந்து பேரை கைது செய்த போலீசார், 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, கிழக்கு கல்லறை சாலை, 'சி' பிளாக் அருகே, வண்ணாரப்பேட்டை போலீசார், நேற்று முன்தினம் இரவு, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, வீடு ஒன்றில் கஞ்சா பதுக்கி விற்பது தெரியவந்தது. இதில் தொடர்புடைய, அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன், 38, அவர் மனைவி குமுதவள்ளி, 30, சங்கர், 28 உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து, 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஐவரையும் சிறையில் அடைத்தனர்.