துரைப்பாக்கம் : துரைப்பாக்கத்தில், கார் ஷோரூமில் நடந்த தீ விபத்து தொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.
ஓ.எம்.ஆர்., துரைப்பாக்கத்தில், 'பென்ஸ்' கார் நிறுவன ஷோரூம் உள்ளது. அங்கு, 50க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.நேற்று திடீரென, அங்குள்ள அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. உடனே, ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறியதுடன், கார்களை அப்புறப்படுத்தினர்.துரைப்பாக்கம் தீயணைப்பு படையினர், தீயை அணைந்தனர். இருந்தும், அலுவலகத்தில் இருந்த, மேஜை, ஆவணங்கள், 'ஏசி' உள்ளிட்டவை தீயில் கருகின.ஒரு மணி நேரம், சுற்றுவட்டார பகுதியில் புகை மூட்டமாக இருந்தது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. துரைப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.