குடியிருப்புகளில் தேங்குகிறது மழை நீர் | விருதுநகர் செய்திகள் | Dinamalar
குடியிருப்புகளில் தேங்குகிறது மழை நீர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 அக்
2020
00:57

சாத்துார் : -விருதுநகர் மாவட்டத்தில் மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமிப்பவர்களினால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகின்றனர்.



நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் புதிய குடியிருப்புகள், நகர்கள் உருவாகி வருகின்றன. இப்பகுதிகள் பெரும்பாலும் ஊருக்கு அருகிலும் சற்று தள்ளியும் அமைந்துள்ளது. மழை நீர் வடிகால், ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும் பலர் வீடுகள் கட்டி குடியேறி வருகின்றனர். இங்கு மழை பெய்தால் இயற்கையாக அமைந்துள்ள கால்வாய்கள் மூலம் கண்மாய் மற்றும் ஊரணிக்கு மழை நீர் சென்றடையும். ஆனால் தற்போது இக் கால்வாய்களை பலர் ஆக்கிரமித்து மணலை கொட்டி அடைத்து கொள்கின்றனர்.



இதனால் புதிய குடியிருப்பு நகர்களில் வீடுகளை சுற்றிலும் மழை நீர் தேங்கி விடுகிறது. ஏற்கனவே ரோடு வசதியில்லாத நிலையில் தண்ணீர் தேங்கி விடுவதால் பாதை சகதியாக மாறி விடுகிறது. பல இடங்களில் மழை பெய்தால் இரு சக்கர வாகனத்தில் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணமே மழைநீர் செல்லும் கால்வாய்களில் சிலர் சுய நலத்துடன் மற்றவர்கள் வீட்டு தண்ணீர் தங்கள் இடம் வழியாக செல்வதை சகித்து கொள்ள மனமின்றி மணலை கொட்டி ஆக்கிரமிப்பு செய்வது தான். இதனால் புதிய நகர்களில் வீடுகள் கட்டியவர்கள் மழைக்காலத்தில் வாடகை வீட்டை நாடி செல்லும் நிலை உள்ளது.



உள்ளாட்சி நிர்வாகம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் காட்டும் அலட்சியத்தால் இது போன்ற அவல நிலை தொடர்கிறது. புதிய நகர் பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் அவதிப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்........தொற்றுநோய் அபாயம்வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்பதால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. தொற்று நோய் பரவும் அச்சமும் ஏற்படுகிறது. விஷ பூச்சிகள் வீடுகளுக்குள் படை எடுக்கின்றன. புதிய நகர்பகுதியில் மழை நீர் வடிந்து செல்ல தண்ணீர் செல்லும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உரிய உத்திரவு பிறப்பிக்க வேண்டும்.குருசாமி, ஓ.மேட்டுப்பட்டி.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X