சாத்துார் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அ.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டத்தில் எம்.எல்.ஏ., ராஜவர்மன் பேசியதாவது:
''நான் வசதியான குடும்பத்தில் பிறந்தவன். எனக்கு சாத்துார் தொகுதியில் போட்டியிட முதல்வர், துணை முதல்வர் வாய்ப்பளித்தனர். வேறு யாரும் பிச்சை போடவில்லை. உயர் பதவியில் உள்ள ஒருவர் ஆறு மாதமாக கூலி படை வைத்து என்னை வெட்டி விடுவேன் என மிரட்டினார். வேறு வழியில்லாமல் வெளியில் வந்துள்ளேன்,'' என்றார்.