விழுப்புரம் : பைக் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்றவர் பரிதாபமாக இறந்தார்.
விழுப்புரம் அடுத்த பக்கிரிப்பாளையத்தை சேர்ந்தவர் அன்பழகன், 40; இவர் கடந்த 19ம் தேதி பிடாகம் வாட்டர் கம்பெனி அருகே, நடந்து சாலையை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து திருச்சி மார்க்கம் சென்ற பைக், அன்பழகன் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அன்பழகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.