விழுப்புரம் : தினமலர் செய்தி எதிரொலியாக, விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் பொதுமக்கள், அதிகாரிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலின் ஒரு பகுதி கேட், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக மூடப்பட்டது. இதனால், மற்றொரு கேட் வழியாக வாகனங்கள் சென்று வந்தன.ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு வரும் வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது.
இதனால், பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் மூடப்பட்டுள்ள முன் மற்றும் பின் பக்க கேட்டுகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன் தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, பெருந்திட்ட வளாகத்தில் மூடப்பட்டிருந்த கேட்டுகள் பொதுமக்கள், அதிகாரிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது.