திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே காதல் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரகண்டநல்லுார், கோதண்டபாணிபுரம், எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் முரளி மகன் மணிகண்டன், 25; இவரது மனைவி ஷாலினி. கடந்த 9 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.மணிகண்டனுக்கு நிரந்தரமான வேலை இல்லை எனக் கூறி ஷாலினியின் பெற்றோர் பிரச்னை செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் ஷாலினி, கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.இதனால், மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் கடந்த 18ம் தேதி இரவு தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.அரகண்டநல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.