திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் தி.மு.க., வினர் நகராட்சியில் மனு அளிப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் தி.மு.க., வினர் நகராட்சியில் மனு அளிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2020
00:11

திண்டிவனம் : திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நகராட்சியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.



இது குறித்து விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,முன்னாள் துணை செயலாளர் வழக்கறிஞர் அசோகன் தலைமையில் தி.மு.க.,நிர்வாகிகள், திண்டிவனம் நகராட்சி மேலாளர் ஸ்ரீபிரகாஷிடம் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:திண்டிவனத்தில் புதிய பஸ் நிலையம் விரைவாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும்,கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம்களை கூடுதலாக அமைக்க வேண்டும்,



நகராட்சி பஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டடத்தை இடித்துவிட்டு வணிக வளாகம் கட்ட வேண்டும், கர்ணாவூர் சுடுகாட்டிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, புதியதாக சுடுகாடு கட்டித்தர வேண்டும், நகரப்பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X