பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2020
00:12

மயிலம் : மயிலம் அடுத்த பாலப்பட்டில் பைக் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.



பெரம்பலூர் மாவட்டம் ஆக்கனூர் அடுத்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கருணாநிதியின் மகன் நீதி செல்வன் 23; இதே ஊரை சேர்ந்த இவரது நண்பர் பழனிமுத்துவின் மகன் சுந்தர்,19: இருவரும் சொந்த கிராமத்திலிருந்து பைக்கில் சென்னை, பேரம்பாக்கத்திதில் உள்ள மொபைல் எலெக்ட்ரானிக்கடையில் வேலையில் சேருவதற்காக நேற்று முன்தினம் அதிகாலை புறப்பட்டனர்.



இவர்கள் அதிகாலை 4:00 மணியளவில் மயிலம் அடுத்த பாலப்பட்டு சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது விழுப்புரத்திலிருந்து சென்னைக்கு பால் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக இவர்கள் சென்ற பைக்கின் பின்னால் மோதியது.இதில் பைக்கை ஓட்டிச்சென்ற நீதி செல்வம் அதே இடத்தில் இறந்தார். படுகாயமடைந்த சுந்தரை மீட்டு,விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X