கோவை;மூதாட்டிக்கு, பைக்கில் 'லிப்ட்' கொடுத்து நகை பறித்து தப்பிய ஆசாமியை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை, செல்வபுரம் நாடார் வீதியை சேர்ந்த ஜெயலட்சுமி,68, காந்திபுரம், நஞ்சப்பா ரோட்டில் நடந்து சென்றார். அந்த வழியாக வந்த ஆசாமி, ஜெயலட்சுமியை பார்த்ததும் பைக்கை நிறுத்தி பேச்சு கொடுத்தார். 'தனியாக நகை அணிந்து சென்றால், திருடர்கள் பறித்து சென்று விடுவார்கள்; நகையை கழற்றி பேக்கில் வைத்து கொள்ளுங்கள், பஸ் ஸ்டாண்டில் பைக்கில் கொண்டு விடுகிறேன்' என்று மர்ம நபர் தெரிவித்துள்ளார்.இதை நம்பிய ஜெயலட்சுமி, இரண்டரை சவரன் நகையை கழற்றி, பேக்கில் வைத்துவிட்டு, அந்த நபரின் பைக்கில் ஏறி சென்றார். காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் முன், ஜெயலட்சுமியை இறக்கி விட்ட அந்த நபர், நகை பேக்குடன் தப்பினார். காட்டூர் போலீசார் மர்ம நபரை தேடி வருகின்றனர்.