தொண்டாமுத்தூர்;பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்த சிறப்பு முகாமில், 193 பேருக்கு, சிறு, குறு விவசாயி சான்று வழங்கப்பட்டது.பிரதான் மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ், சொட்டு நீர் பாசனம் அமைக்க, சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த மானியம் பெறுவதற்காக, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், சிறு, குறு விவசாயி சான்று வழங்கும் சிறப்பு முகாம், கடந்த, 13 மற்றும் நேற்று நடந்தது.பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட, 6 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடந்தது. 13ம் தேதி நடந்த சிறப்பு முகாமில், 123 பேருக்கும், நேற்று நடந்த சிறப்பு முகாமில், 70 பேருக்கும் என, 193 பேருக்கு சிறு, குறு விவசாயி சான்று வழங்கப்பட்டது.