என்.டி.சி., மில் திறப்பு இழுபறி: முத்தரப்பு பேச்சு ஒத்திவைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2020
01:17

கோவை:என்.டி.சி., மில்களை திறக்க வலியுறுத்தி, தொழிலாளர் நலத்துறை மண்டல கமிஷனர் தலைமையில் நடந்த, முத்தரப்பு பேச்சில் முடிவு எட்டப்படவில்லை.தேசிய பஞ்சாலை கழகத்துக்கு சொந்தமாக, தமிழகத்தில் ஏழு மில்கள் உள்ளன. கோவையில் மட்டும், ஐந்து மில்கள் உள்ளன. கொரோனா தொற்று பரவல் காரணமாக, மில் இயக்கம் மார்ச், 23 முதல் நிறுத்தப்பட்டது. ஆறு மாதம் கடந்தும் மில்கள் இயக்கப்படவில்லை. மில்களை திறக்க வலியுறுத்தி, தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தின. மில் நிர்வாகத்தரப்பில் மதுரை மண்டல தொழிலாளர் நலத்துறை கமிஷனர் சிவராஜ் தலைமையில், 'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக முத்தரப்பு பேச்சு நடந்தது.மில் நிர்வாகத்தரப்பில், என்.டி.சி., மில் நிர்வாகப்பொதுமேலாளர் வெங்கடேசன், மனிதவளமேம்பாட்டுத்துறை துணை மேலாளர் ராஜேந்திரகுமார் பங்கேற்றனர். தொழிற்சங்கத்தரப்பில் பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். மில் திறப்பது, தொழிலாளர்களுக்கு முழுச்சம்பளம் வழங்குதல், தீபாவளி போனஸ் மற்றும் முன்பணம் வழங்குவது குறித்து தொழிற்சங்க தரப்பில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.நிர்வாகத்தரப்பில், 'முதலில் தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள சம்பளத்தொகையை கொடுக்க வேண்டும். நாடு முழுவதும், 24 மில்களில் உற்பத்தி செய்த நுால் மற்றும் துணி ஆகியவை, 150 கோடி ரூபாய்க்கு தேக்கமடைந்துள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.தொழிற்சங்க தரப்பில், 'தேக்கமடைந்த துணிரகங்களை விற்பனை செய்து கொடுக்கும் வரை தொழிலாளர்களின் குடும்பம் தாங்காது. இப்பிரச்னையில், மத்திய அரசு நேரடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும். இல்லாவிடில், தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இறங்கும்' என தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, 'இரண்டாம் கட்டமாக, முத்தரப்பு பேச்சு கோவையில் நவம்பர் முதல் வாரத்தில் நடத்தப்படும்; சுமுகதீர்வு காணப்படும்' என, நிர்வாகத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X