சோழவந்தான் : சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலத்தில் விரிவாக்கம் செய்யப்பட்ட அந்தோனியார் சர்ச் திறப்பு விழா நடந்தது.
மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோனி பாப்புசாமி சர்ச்சை திறந்தார். முதன்மை குரு ஜெயராஜ், பாதிரியார்கள் எட்வர்ட் பிரான்சிஸ் சேவியர், பால்பிரிட்டோ, உதவி பாதிரியார் குரூஸ் பங்கேற்றனர். சிறப்பு திருப்பலி நடந்தது.