மதுரை : செல்லம்பட்டி ஒன்றியம் நாட்டாமங்கலம் ஊராட்சி தலைவர் கணேசனை மீட்க வேண்டும் என கிராமத்தினர் மதுரையில் கலெக்டர் வினய்யிடம் முறையிட்டனர்.
அவர்கள் கூறியதாவது: பட்டியல் இனத்தை சேர்ந்த அவரை சிலர் 'கைப்பாவையாக' வைத்து உள்ளனர். ஊராட்சியில் காலியான செயலர் பதவிக்கு 36 பேர் விண்ணப்பித்தனர். ஆனால் 18 வயதான ஒருவருக்கு அந்த வேலையை வழங்கும்படி தலைவரை மிரட்டுகின்றனர். அவர் ஏற்க மறுத்ததால் கடத்தி சென்றுள்ளனர். அவரை மீட்க மனு வழங்கப்பட்டது என்றனர்.