மதுரை:பயணிகள் வசதிக்காக மைசூரு-துாத்துக்குடி இடையே பண்டிகை கால சிறப்பு தினசரி ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அக். 23 முதல் நவ. 30 வரை மைசூருவில் மாலை 6:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06236) மறுநாள் காலை 11:15 மணிக்கு துாத்துக்குடிக்கு செல்லும். அக். 24 முதல் டிச. 1 வரை துாத்துக்குடியில் மாலை 4:25க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06235) மறுநாள் காலை 9:55 மணிக்கு மைசூரு செல்லும்.வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், திருமங்கலம். திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், கரூர், புகலுார், கொடுமுடி, ஈரோடு, சேலம், தர்மபுரி, பாலக்கோடு, ஓசூர், காரமேலரம், பெங்களூரு, கிழக்கு கன்டோன்மென்ட், பெங்களூரு சிட்டி, கெங்கேரி பிடதி, ராமநகரம், சென்னப்பட்டனா, மத்துார், மாண்டியா, பாண்டவபுரம் ஸ்டேஷன்களில் நின்று செல்லும். ரயில்களுக்கான முன்பதிவு இன்று(அக்.21) காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.