பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த சி. புதுப்பேட்டை கிராமத்தில், அ.தி.மு.க., கொடியேற்று விழா நடந்தது.ஒன்றிய செயலாளர் ராசாங்கம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன் முன்னிலை வகித்தனர். கடலுார் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பாண்டியன் பங்கேற்று அ.தி.மு.க., கொடியேற்றினார்.
முன்னாள் நகர செயலாளர் சுந்தர், முன்னாள் ஊராட்சி செயலாளர் கண்ணன், ஒன்றிய துணை செயலாளர் குட்டியாண்டி, ஒன்றிய கவுன்சிலர் ரவி, ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், முன்னாள் ஒன்றிய செயலர் இளங்கோவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் சிவ சிங்காரவேலு, செல்வரங்கம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் வேல்முருகன், மீனவரணி செயலாளர் வீராசாமி, புவனகிரி ஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், ஊராட்சி தலைவர்கள் ராஜேஸ்வரி ரங்கசாமி, சமய சங்கரி மோகன், மரகதம், நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், சிவக்குமார், நாகராஜ், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.