கடலுார் : போனஸ் வழங்க வலியுறுத்தி, கடலுாரில் அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் தலைமை அஞ்சல் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தேசிய அஞ்சல் ஊழியர் சங்க முன்னாள் கோட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலாளர் ரட்சகர் வரவேற்றார்.
அகில இந்திய தபால் ஊழியர் சங்க கோட்ட செயலர் ரவிக்குமார், அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க கோட்ட செயலர் கக்கன் கோரிக்கைகள் குறித்து பேசினர். பொருளாளர் விஜயராஜன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில், 2019-2020ம் ஆண்டுக்கான போனஸ், நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப் படியை வழங்க வேண்டும்
பண்டிகை கால முன் பணம் வழங்கிட வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலிறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், அறிவரசு, அப்துல்வகாப், பிரசாத், வெங்கடேசன், மனோகரன், ராஜேந்திரன், ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.