லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது | கடலூர் செய்திகள் | Dinamalar
லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2020
04:00

கடலுார் : கடலுாரில் லாட்டரி சீட்டு விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.



கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். வண்டிப்பாளையம் பிள்ளையார் கோவில் அருகே லாட்டரி சீட்டு விற்ற அதேப் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல், 29; என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1,200 மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்கள் மற்றும் விற்பனை தொகையை பறிமுதல் செய்தனர். அதே போல், திருப்பாதிரிப்புலியூரில் லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன், 45 ; என்பவரை கைது செய்து, ரூ.1,600 மதிப்புள்ள லாட்டரி சீட்டுக்கள் மற்றும் விற்பனை தொகையை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X