கரும்பு கோட்ட அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2020
04:02

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கரும்பு நிலுவை தொகை வழங்கக்கோரி, கரும்பு கோட்ட அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



விழுப்புரம் அடுத்த முண்டியம்பாக்கத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு, விழுப்புரம் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களின் கரும்புகளை அறுவடை செய்து அரவைக்கு அனுப்பி வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கான கரும்பு தொகை சுமார் ரூ.40 கோடி வரை கடந்த ஏழு மாதங்களாக வழங்காமல் ஆலை நிர்வாகம் நிலுவையில் வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.



இதனால், ஆத்திரமடைந்த வளவனுார் சுற்றுப்பகுதி விவசாயிகள், வளவனுாரில் உள்ள கரும்பு கோட்ட அலுவலகத்தில் நேற்று திரண்டனர்.அப்போது, அலுவலகத்தில் பணியில் இருந்த அலுவலர்களை உள்ளேயே வைத்து விவசாயிகள் திடீரென பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரும்பு நிலுவை தொகை வழங்கக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.



தகவலறிந்த ஆலை நிர்வாகத்தினர் விரைந்து வந்து, 15 நாட்களுக்குள் நிலுவை தொகை வழங்குவதாக கூறினர்.இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natesa -  ( Posted via: Dinamalar Android App )
21-அக்-202008:16:41 IST Report Abuse
natesa central government agricultural bill will help to get farmers sugar cane money from sugar Factory? pm supporters must think about ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X