கச்சிராயபாளையம் : எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் தம்பதியை கொடுவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகநாதன், 50; இவரது மனைவி கோவிந்தம்மாள், 45; இவர்கள் வீட்டில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது குடிபோதையில் அங்கு வந்த கருணாநிதி மகன் பாண்டு, 29; என்பவர், சத்தம் போட்டு பேசுவதாகக்கூறி வீட்டிற்குள் புகுந்து இருவரையும் கொடுவாளால் வெட்டினார். படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து பாண்டுவை கைது செய்தனர்.