பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2020
04:03

விழுப்புரம் : காணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகளை கண்டித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர், அரசாணை 52ஐ முறையாக செயல்படுத்தாமல் இருப்பது உட்பட மாற்றுத்திறனாளிகளை புறக்கணிக்கும் நடவடிக்கையை கண்டித்து கோஷமிட்டனர். ஒன்றிய செயலாளர் முருகன், துணை தலைவர்கள் ஜெயக்குமார், முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகன் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X