விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்காத ஊராட்சி செயலர் இருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் ஊராட்சி ஒன்றியம், கொடூர், பொம்பூர் ஆகிய ஊராட்சிகளில், பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் பணிகளை விரைந்து முடிக்கப்படாமல் உள்ளது.இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்காத காரணத்திற்காக, கொடூர் ஊராட்சி செயலர் சிவக்குமார், பொம்பூர் ஊராட்சி செயலர் குமார் ஆகிய இருவரையும் 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மஞ்சுளா நேற்று உத்தரவிட்டார்.