குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது மழைநீர்: மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2020
09:49

சேலம்: சேலத்தில், நள்ளிரவு முதல், விடிய, விடிய பெய்த மழையால், தாழ்வான குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடானது. இதனால், தூக்கத்தை தொலைத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது.


வங்க கடல் பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வளி மண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால், சில நாளாக, சேலம் மாவட்டத்தில், அடிக்கடி, பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை, மேக மூட்டத்துடன், தூறல் மழை பெய்த நிலையில், பின், சூரியன் தலைகாட்டியது. நள்ளிரவு, 12:00 மணிக்கு பின் தொடங்கிய மிதமான மழை, விடிய, விடிய, பரவலாக பெய்தது. காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக சேலத்தில், 87.3 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. ஆணைமடுவு, 56 மி.மீ., கெங்கவல்லி, 52, ஆத்தூர், 50.6, கரியகோவில், 50, வீரகனூர், 38, தம்மம்பட்டி, 18, ஏற்காடு, 14, காடையாம்பட்டி, 9, பெத்தநாயக்கன்பாளையம், 6, வாழப்பாடி, 1 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக, சேலம், பச்சபட்டி, நாராயண நகர், எருமாபாளையம், கிச்சிப்பாளையம் போன்ற பகுதிகளில் இருந்து, குமரகிரி ஏரிக்கு செல்லும் பிரதான நீர் வழித்தடங்கள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால், வெளியேற வழியின்றி, மழைநீர், தாழ்வான பகுதிகளை சூழ்ந்தது. இதனால், குடியிருப்பு பகுதிகளில், வெள்ளம் புகுந்து, மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர். பச்சப்பட்டி, இரண்டாவது, மூன்றாவது கிராஸ் பகுதிகளில், மழைநீர் பெருக்கெடுத்து ஓடி, வீடுகளில் தேங்கி நிற்பதால், மக்கள், விடிய, விடிய தூங்க முடியாமல் தவித்தனர். தண்ணீரை வெளியேற்றியும், தொடர்ந்து தேங்கி வருவதால், அவர்களின் இயல்புநிலை, அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பெய்த மழையால், தாதம்பட்டியில், ஏராளமான விளைநிலங்கள் மூழ்கின. பயிர்களும் அழுகி நாசமாகின. தொடர் மழையால், நிலத்தை மூழ்கடித்த மழைநீர், தற்போது, சாலைகள், குடியிருப்புகளை ஆக்கிரமித்துக்கொண்டது. அதனால், மக்கள், வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். கால்நடைகளும் பரிதவிப்புக்கு ஆளாகின.


அம்மாபேட்டை, சீலாவரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை, மழைநீருடன், சாக்கடை கழிவும் சேர்ந்து தேங்கி நிற்பதால், தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. தம்மநாயக்கன்பட்டி, தீரனூரில் உள்ள கொட்டமுத்தான் ஏரி, 360 ஏக்கருடையது. தொடர் மழையால், அந்த ஏரி நிரம்பி வழிகிறது. இதனால், தீரனூர், கலர்காடு உள்ளிட்ட கிராமங்களில், 70க்கும் அதிகமான வீடுகளை, வெள்ளம் சூழ்ந்துகொண்டது. இதுவரை இல்லாத அளவு, அதிகளவில் தண்ணீர் சூழ்ந்ததால், கடும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக, மக்கள் கூறினர். ஆடு, மாடு, கோழிகளை தங்க வைக்க இடமின்றி, சாலைகளில் பராமரித்து வருவதாக தெரிவித்தனர். கால்நடை தீவன பயிர்களும் மூழ்கிவிட்டன. இரவில், தேள், பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள், குடியிருப்பு பகுதிகளில் படையெடுப்பதாக, வேதனை தெரிவித்துள்ளனர். அதனால், மதகு வழியாக தண்ணீரை வெளியேற்ற, மக்கள் வலியுறுத்தினர்.


திருமணிமுத்தாற்றில் வெள்ளம்: சேலம், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி, தண்ணீர் பாய்ந்தோடியது. பட்டர்பிளை மேம்பாலத்தின் கீழ், பெரும் இரைச்சலுடன் ஓடிய தண்ணீரை பார்த்து, மக்கள், தங்கள் மொபைல் போன்களில், 'போட்டோ' பிடித்து மகிழ்ந்தனர். உத்தமசோழபுரம், ஆத்துக்காடு பாலத்தின் மேலே, தண்ணீர், நுரை பொங்கி வழிந்தோடியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, மக்கள் அவதிப்பட்டனர். ஆட்டையாம்பட்டி, இனாம் பைரோஜி, புதுப்பாளையம் ஏரியில் இருந்து, நாமக்கல் மாவட்டம், மின்னக்கல் சாலையில், திருமணிமுத்தாற்று தரைப்பாலத்தை வெள்ள நீர் மூழ்கடித்து சென்றதால், பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் தத்தளித்தபடி பாலத்தை கடக்கும் நிலை ஏற்பட்டது. ஆற்றின் கரையோரம் உள்ள வயல்களுக்குள் மழைநீர் புகுந்தது. தாழ்வான வீடுகளை, வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.


வர்த்தகம் மந்தம்: தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள, ஏரியின் ஒரு பகுதியில், தினசரி காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது. அங்கு, நேற்று முன்தினம் பெய்த மழையால், மார்க்கெட் சேறு சகதியாக காணப்பட்டது. வியாபாரிகள் பலர், மார்க்கெட்டுக்கு வரவில்லை. காய்கறி வரத்தும் குறைந்ததால், மார்க்கெட்டில் வர்த்தகம் மந்தமாக இருந்தது.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X