சிறுமியை கடத்தி திருமணம் செய்த 'தாத்தா' கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2020
10:03

ஆத்தூர்: சிறுமியை கடத்தி திருமணம் செய்த, தாத்தா உறவு முறை கொண்டவரை, போலீசார் கைது செய்தனர்.


சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம், தில்லை நகரை சேர்ந்த, வீரமுத்து மகன் பரமேஸ்வரன், 42; தெருக்கூத்து கலைஞராகவும், தையல் தொழிலாளியாகவும் பணிபுரிகிறார். இவருக்கு, மனைவி சந்தியா, 35, மகன் கபிலன், 12, மகள் தன்ஷிகா, 6, உள்ளனர். ஏழு ஆண்டுக்கு முன், மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு தனியாக வசிக்கிறார். இந்நிலையில், அதே பகுதியில், பிளஸ் 2 படித்து விட்டு வீட்டில் இருந்த, 18 வயது சிறுமியுடன், நான்கு மாதமாக நெருங்கி பழகினார். அச்சிறுமிக்கு, இவர், 'தாத்தா' உறவுமுறை என்பதால், சிறுமியின் பெற்றோர் சந்தேகப்படவில்லை. கடந்த, 17ல், வீட்டிலிருந்த சிறுமியை காணவில்லை. பின், பரமேஸ்வரன் கடத்திச்சென்றது தெரிந்ததால், நேற்று காலை, 8:00 மணிக்கு, அச்சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், ஆத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் முன், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், சிறுமியை பாதுகாப்பாக மீட்டு, கடத்தியவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து, சிறுமியுடன், பரமேஸ்வரன் மும்பை செல்ல திட்டமிட்டு, ஆத்தூர், புது பஸ் ஸ்டாண்டில், பஸ்சில் செல்லவிருந்தபோது, இருவரையும் போலீசார் மீட்டனர். விசாரணையில், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலுக்கு அழைத்துச்சென்ற பரமேஸ்வரன், சிறுமி கழுத்தில் தாலி கட்டி திருமணமும் செய்துள்ளார். அதே கோவிலில் தங்கியிருந்து, நேற்று, சிறுமியுடன் ஆத்தூர் வந்தது தெரிந்தது. சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக வழக்குப்பதிந்த போலீசார், பரமேஸ்வரனை, கைது செய்தனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X