கொசு மருந்து வாங்கியதில் ரூ.1.5 கோடி முறைகேடு: 'சஸ்பெண்ட்' உதவி இயக்குனர் உள்பட 4 பேர் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2020
10:04

சேலம்: பேரூராட்சிகளுக்கு, கொசு மருந்து வாங்கியதில், 1.5 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட உதவி இயக்குனர் உள்பட, நான்கு பேர் மீது, தலா, 12 பிரிவுகளில், விஜிலன்ஸ் போலீசார் வழக்குப்பதிந்தனர்.


சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளது. இங்கு, 2014 - 15ல், கொசு மருந்து வாங்கியதில், முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. ஊழல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., சந்திரமவுலி தலைமையில், போலீசார் அடங்கிய குழுவினர், ஆவணங்களை தணிக்கை செய்தனர். அப்போது, 'பைரோத்ரம், அபேட், பென்சியான்' எனும் மூன்று வகை கொசு மருந்து கொள்முதல் செய்தமைக்கான ஆவணங்கள் சிக்கின. ஆனால், அதற்காக, தமிழக பேரூராட்சிகளின் இயக்குனர் வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை. மாறாக, அங்கீகாரமற்ற, சேலம், சின்னதிருப்பதியை சேர்ந்த, 'மாருதி கெமிக்கல்' நிறுவனத்திடமிருந்து, தரமற்ற கொசு மருந்து, 2.90 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, அப்போதைய, சேலம் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் திருஞானம், அலுவலக செயல் அலுவலர் நாகராஜன், இளநிலை உதவியாளர் ரஞ்சித்குமார், மாருதி கெமிக்கல் நிறுவன உரிமையாளர் கோபிநாத் மீது, நேற்று முன்தினம், விஜிலன்ஸ் போலீசார் வழக்குப்பதிந்தனர். குறிப்பாக, மோசடி, கூட்டு சதி, போலி ஆவணம் தயாரித்தல், அதை உண்மை ஆவணமாக பயன்படுத்தல், நம்பிக்கை துரோகம் உள்பட, இந்திய தண்டனை சட்டத்தில் ஒன்பது பிரிவுகள், ஊழல் தடுப்பு சட்டப்படி, மூன்று பிரிவுகள் என, நான்கு பேர் மீதும், தலா, 12 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனர். இதனிடையே, திருஞானம், 59, வேலூருக்கு, இடமாற்றப்பட்டு, அங்கு நடந்த முறைகேடு விவகாரத்தில், கடந்த பிப்., 28ல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதேபோல், நாகராஜன், தர்மபுரிக்கு மாற்றப்பட்டு, 2019 ஜன., 31ல், 'சஸ்பெண்ட்' ஆனார். தற்போது, இளநிலை உதவியாளர் ரஞ்சித்குமார், 42, அயோத்தியாப்பட்டணத்தில் பணிபுரிகிறார்.


இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: கொசு மருந்து வாங்க, தமிழ்நாடு அரசு மருத்துவ சேவை கழக ஒப்புதல் இல்லை. நிர்ணயிக்கப்பட்ட விலையையும் பொருட்படுத்தவில்லை. கொள்முதல் செய்த, கொசு மருந்தை, பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை. அங்கீகாரமற்ற நிறுவனத்திடமிருந்து மருந்து வாங்கியதாக, ஆவணங்கள் மட்டும் உள்ளன. உண்மையில், மருந்து கொள்முதல் நடந்திருந்தால், மோசடி தொகை, உத்தேச மதிப்பீடாக, 1.5 கோடி ரூபாய் வரும். புலன் விசாரணைக்கு பின், மொத்த மோசடி, முழுமையாக தெரியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X