லாரி மீது ஷேர் ஆட்டோ மோதல்: 2 பேர் பலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2020
14:29

திண்டிவனம் : கிளியனுார் அருகே நின்றிருந்த லாரி மீது ஷேர் ஆட்டோ மோதிய விபத்தில் இரண்டு பேர் இறந்தனர்; 11 பேர் படுகாயமடைந்தனர்.




கடலுார் மாவட்டம், எஸ்.புதுாரை சேர்ந்தவர் ராஜேந்திரன்,44; லாரி டிரைவர். இவர், விழுப்புரம் மாவட்டம் பெருமுக்கல் பகுதியில் ஜல்லி லோடு ஏற்றுவதற்காக, நேற்று மாலை 6.45 மணிக்கு டி.என்., 31 ஏஏ 3765 என்ற பதிவெண்ணுள்ள டிப்பர் லாரியை ஓட்டி சென்றார்.கிளியனுார் அடுத்த தைலாபுரத்தில், ஓட்டல் எதிரே லாரியை ஓரமாக நிறுத்தி விட்டு, சாப்பிட சென்றார்.அப்போது, புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் 13 பெண்கள், டி.என். 32 கியூ 7915 என்ற பதிவெண் கொண்ட ஷேர் ஆட்டோவில் பை-பாஸ் வழியாக கிளியனுார் சென்றனர்.


ஆட்டோவை, பாப்பாஞ்சாவடியை சேர்ந்த காத்தவராயன்மகன் ஜீவா,21; ஓட்டி சென்றார்.இந்த ஆட்டோ, தைலாபுரத்தில் சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது.இவ்விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த கிளியனுார், அண்ணா நகரை சேர்ந்த உதயா மனைவி ஞானவள்ளி,22; மாணிக்கவாசகம் மகள் அங்காள பரமேஸ்வரி,14; ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.படுகாயமடைந்த அதே பகுதியை சேர்ந்த மோகன் மகள் சூரியா,14; ஞானசேகர் மனைவி ஜமுனா,37; பச்சையப்பன் மகள் மீனா,19; மணிகண்டன் மனைவி காமாட்சி,19; ஆறுமுகம் மனைவி சரளா,15; ராஜாங்கம் மகள்கள் ஸ்ரீமதி,16; வெண்ணிலா,19; வெங்கடேசன் மனைவி வரலட்சுமி,31; மோகன் மகள் கிருத்திகா,16; ஏழுமலை மகள் விஜயலட்சுமி,16; கணேசன் மனைவி சிவபூஷணம், 34; ஆகியோரை கிளியனுார் போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.


விபத்தில் உயிரிழந்த ஞானவள்ளிக்கு, 3 மற்றும் 4 வயதில் குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர், கடந்த 6 மாதத்திற்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் ராஜேந்திரன், ஆட்டோ டிரைவர் ஜீவா மீது, அஜாக்கிரதையாக வாகனத்தை நிறுத்துதல் மற்றும் ஓட்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X