திருப்பூர் : அப்துல்கலாம் விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் திறமையான கபடி விளையாடும் மாணவியருக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது.
திருமுருகன்பூண்டி, அப்துல்கலாம் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவிகளுக்கான இலவச கபடி பயிற்சி முகாம் நடந்து வருகிறது. திருப்பூர் மாநகராட்சி, அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவிகள், கல்லுாரி மாணவியர் என, 40 பேர் இதில் பங்கேற்றுள்ளனர். சிறப்பாக கபடி விளையாடும் திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, கடலுார், திண்டுக்கல் பகுதியை சேர்ந்த, 16 மாணவிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.கபடி விளையாடும் மாணவியர் பூண்டி செங்குந்தர் திருமண மண்டப விடுதியில் தங்கி, பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜன், தாஸ், ராஜா, மதுமிதா உள்ளிட்டோர் பயிற்சி வழங்குகின்றனர்.தினமும் காலை, 6:30 முதல், 8:30 மணி வரையும், மாலை, 4:30 முதல், 6:30 மணி வரையும் பயிற்சி நடக்கிறது. திறமையான கபடி வீராங்கனையர் பங்கேற்க, 9952265009 என்ற எண்ணில் அழைக்கலாம், என பயிற்சியாளர் தெரிவித்தார்.