திருநங்கை கழுத்து அறுத்து கொலை ; கோவையில் கொடூரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
02:34

கோவை : கோவையில் திருநங்கையை கழுத்து அறுத்து கொலை செய்து, தண்ணீர் டிரமிற்குள் சடலத்தை மறைத்து தப்பிய ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை, சாய்பாபா காலனி, என்.எஸ்.ஆர்., ரோட்டில் வசித்து வந்தவர் திருநங்கை சங்கீதா,65. கோவை மாவட்ட திருநங்கை சங்க தலைவராக பல ஆண்டாக பொறுப்பு வகித்து வந்தார். திருநங்கைகள் பலர் சேர்ந்து, வடகோவையில், 'டிரான்ஸ் கிச்சன்' என்ற பெயரில், பிரியாணி ஓட்டல் கடந்த சில மாதங்களுக்கு முன் திறந்தனர். இதில், சங்கீதாவும் பங்குதாரராக சேர்ந்தார்.அவருடன் ஓட்டல் நடத்துபவர்கள், சங்கீதா மொபைல் போனுக்கு அழைத்தனர். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக மொபைல் போன், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்ததால், சந்தேகமடைந்து நேற்று வீட்டுக்கு சென்று பார்த்தனர்.



அப்போது, வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால், போலீசுக்கு தகவல் அளித்தனர். சாய்பாபாகாலனி போலீசார், கதவை திறந்து பார்த்தபோது, அங்கிருந்த தண்ணீர் டிரமிற்குள், சங்கீதாவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, சடலத்தை அடைத்து வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சங்கீதாவுக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சொத்து அபகரிக்க கொலை நடந்ததா அல்லது தொழில் போட்டி காரணமாக கொல்லப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.திருநங்கைகள் சோகம்சங்கீதா கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், அவரது வீட்டு முன் திருநங்கைகள் திரண்டனர். திருநங்கைகள் கூறுகையில், 'எங்களுக்கு அரசு சார்பில் கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற்றுதருவதற்கான பணியில், சங்கீதா தீவிரமாக பாடுபட்டார். கொரோனா பாதிப்பு காலத்தில், மாவட்ட நிர்வாகம் உதவியுடன் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உதவி செய்தார். கொலையாளிகளை கைது செய்ய, போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X