போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
02:49

வாலிபர் தற்கொலைகூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி, நந்திவரம் பாலாஜி அவென்யூவைச் சேர்ந்த சுரேஷ்குமார் மகன் விக்னேஷ், 29. இவருக்கும், கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அடுத்த, இரணியல் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ் மகள் கோபிகா, 25, என்பவருக்கும், ஒன்பது மாதங்களுக்கு முன், திருமணம் நடந்தது.சில மாதங்களாக, வேலைக்கு செல்லாததால், விக்னேஷ், பலரிடம், 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருந்தார்.அதை திருப்பி கொடுக்க முடியவில்லை. பண நெருக்கடி அதிகமானதால், மனமுடைந்த அவர், நேற்று முன்தினம், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தகவலறிந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.நாய் மோதி விபத்துஸ்ரீபெரும்புதுார்: சென்னை, திருமுல்லைவாயலைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு, 39, கார்பெண்டர். ஸ்ரீபெரும்புதுார் அருகே படப்பையில், 16ம் தேதி, பணிக்கு வந்த கணேஷ்பாபு, பணிமுடித்து, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு புறப்பட்டார்.வண்டலுார்- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், வரதராஜபுரம், ராயப்பாநகரை கடந்தபோது, சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதி விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த கணேஷ்பாபு, பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் பலியானார்.தனியார் ஊழியரிடம் மொபைல் பறிப்புசெங்கல்பட்டு: கும்பகோணம், மாதுரம்பேட்டை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செல்லதுரை மகன் அசோக்குமார், 23. இவரது நண்பர் வசந்தராஜ், 22.இவர்கள், செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் ஆண்கள் விடுதியில் தங்கி, ஒரகடத்தில் உள்ள, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.வழக்கம்போல் வேலைக்கு செல்ல, சிங்கபெருமாள் ரயில்வே கடவுபாதை அருகில், நேற்று முன்தினம் இரவு, 11: 00 மணிக்கு, கம்பெனி பஸ்சுக்காக காத்திருந்தனர்.அப்போது, மூன்று பேர் உடைய கும்பல், 'ஏன் இங்கு நிற்கிறீர்கள்' என அவர்களிடம் கேட்டு, இருவரையும் கத்தியால் தாக்கி, விலை உயர்ந்த மொபைல் போன்களை பறித்துச்சென்றனர். மறைமலைநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X