பயமோ, பதற்றமோ அறவே கூடாது! 'நீட்'டில் சாதித்த முத்துக்கள் உற்சாகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
03:00

'பயிற்சி மையம் செல்வது கட்டாயமல்ல. வாய்ப்பிருந்து சென்று படித்தால், நிச்சயம் நல்ல மதிப்பெண் பெற முடியும். பயமோ, பதற்றமோ இல்லாமல் படித்தாலே, நீட் தேர்வில் சாதிக்க முடியும்' என, தேர்வில் சாதித்த மாணவ - மாணவியர் உற்சாகமாக தெரிவித்தனர்.



கே.சவுமியா, 390 / 720, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர் மாவட்டம்இரண்டு ஆண்டுகளாக, 'நீட்' தேர்வில் பங்கேற்று, இரண்டு முறையும் தேர்ச்சி பெற்றுள்ளேன். மேலும், அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், மீண்டும் அடுத்த ஆண்டும், தேர்வு எழுத விரும்புகிறேன். இந்த ஆண்டு, மருத்துவ கல்லுாரியில் இடம் கிடைத்தால் மகிழ்ச்சியே. என் விருப்பத்தை அறிந்து, என் சகோதரியும், பெற்றோரும், எனக்கு முழு ஆதரவும், ஊக்கமும் அளித்து வருகின்றனர். தனியார் பயிற்சி மையத்தில், நீட் பயிற்சி பெற்று வருகிறேன். எனக்கான தேடலில், என் சகோதரியின் பங்கு அளப்பறியது.



சுய தொழில் செய்துவரும் என் பெற்றோர், என் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்து வருகின்றனர். என் குடும்பத்தினரே, எனக்கு உந்து சக்தி. மருத்துவம் பயின்று, உள்ளூர் மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.டி. அனனியா சாத்ராக், ௪௪௭/௭௨௦, திருமலை நகர், அஸ்தினாபுரம்இது என்னுடைய முதல் முயற்சி. அனைத்து கேள்விகளையும் எதிர்கொள்ளும் வகையில், தேர்வு இருந்தது. அதே நேரத்தில், சிந்தித்து எழுத வேண்டியிருந்தது. இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாலும், எனக்கு, எம்.பி.பி.எஸ்., 'சீட்' கிடைக்கவில்லை. காரணம், நாங்கள் கிறித்துவ ஆதிதிராவிடர் என்பதால் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், என்னை விட குறைந்த மதிப்பெண்கள் பெற்ற பலருக்கு, 'சீட்' கிடைத்துள்ளது. இது, மன வருத்தமாக உள்ளது. மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே சீட் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.



ஆர்.சக்திவேல், 552/720, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டுபெற்றோர் மற்றும் எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், நீட் தேர்வு எழுத பெருமளவில் ஊக்கம் அளித்தனர். தற்போது, மாற்றி வடிவமைக்கப்படிருக்கும், தமிழக அரசின் பாடப் புத்தகங்களும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற பெரிதும் உதவின.என்னைப்போல், இன்னும் பல மாணவர்கள், நீட் தேர்வில், வெற்றி பெற என் வாழ்த்துகள். நீட் தேர்வில், மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மருத்துவம் படித்து, இருதய சிறப்பு நிபுணராக வேண்டும் என்பதே என் லட்சியம்.



எஸ்.நவீன்குமார், 527/720, புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டுபிளஸ் 2 தேர்வு எழுதிய பிறகு தான், நீட் தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தேன். அரசு நடத்திய நீட் பயிற்சி மையத்தில் படித்தேன். காலை, 5:00 மணிக்கு எழுந்து படிப்பதை, வழக்கமாக கொண்டுள்ளேன். இதனால், தேர்வு எழுவது எளிதாக இருந்தது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற, பெற்றோர், ஆசிரியர்கள் ஊக்கம் அளித்தனர். மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது, மகிழ்ச்சி அளிக்கிறது. எலும்பு முறிவு சிறப்பு நிபுணராக வேண்டும் என்பதே என் லட்சியம்.ஜி.ஸ்வேதா, ௭௦௧/௭௨௦, வேலம்மாள் வித்யாலயா பள்ளி, மேல் அயனம்பாக்கம்நான் சென்னையில் முதலிடம் பெற்றுள்ளேன். அதேபோல், இந்திய அளவில், 62வது இடத்திலும், தமிழக அளவில், மூன்றாவது இடத்தையும் பிடித்து இருக்கிறேன். இதற்காக, நான் இரண்டு ஆண்டுகள் முயற்சி செய்து படித்தேன். ஊரடங்கால் என் மதிப்பெண் குறைந்தது.பள்ளிக்கு சென்று, நேரடியாக ஆசிரியர்களின் அறிவுறுத்தலை கேட்டு இருந்தால், இன்னும் அதிக மதிப்பெண் எடுத்திருப்பேன். இருப்பினும், என் பள்ளி ஆசிரியர்கள், எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர். 'ஆன்லைன்' வகுப்பு உள்ளிட்ட பல்வேறு வழிகளில், எனக்கு ஆலோசனைகளை வழங்கினர்.ஜெ.சந்தியா, 168 /720, தனியார் பள்ளி மாணவி, பொன்னேரிஆசிரியர்கள் மற்றும் பெற்றோர், 'நீட்' எழுத ஊக்கப்படுத்தினர். பயிற்சி மையம் எதுவும் செல்லாமல், வீட்டில் இருந்து படித்தேன். பிளஸ் 2 பாடத் திட்டத்தில் இருந்து, 50 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பயிற்சி மையம் சென்று படித்திருந்தால், 500க்கும் அதிகமான மதிபெண் பெற்றிருக்க முடியும். 'நீட்' தேர்வு குறித்த பயமும், தேர்வு நேரத்தில் பதட்டமும் இன்றி எழுதினால் நிச்சயம் சாதிக்கலாம்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X