செய்தி சில வரிகளில்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
03:00

மணவாள மாமுனிகள் சாற்றுமுறைஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜரின் அவதார தலமான ஆதிகேசவப் பெருமாள் கோவிலில், மணவாள மாமுனிகளின், 650வது உற்சவ விழா, 12ம் தேதி துவங்கியது.பத்து நாட்கள் விமரிசையாக நடக்கும் இந்த விழா, கொரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு எளிமையாக நடந்தது.விழாவின், பத்தாவது நாளான நேற்று காலை, கந்தபொடி வசந்தமும், மதியம் திருமஞ்சனமும், இரவு சாற்றுமுறை விழாவும் நடந்தது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.மன நலம் பாதிக்கப்பட்டவர் மீட்புகாஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் முடியாண்டி, 25; மன நலம் பாதிக்கப்பட்டவர். இவர், பல தரப்பினருக்கு, இடையூறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதையறிந்த, காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் 'லிட்டில் ஹார்ட்' மன நல காப்பக மீட்பு குழுவினர், முனியாண்டியை மீட்டு கடப்பாக்கம் மன நல காப்பகத்தில் சேர்த்தனர்.அவருக்கு, கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு, முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என, காஞ்சிபுரம் மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி தெரிவித்தார்.ஆசிரியர் குடும்பத்திற்கு நிதியுதவிமாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம், கண்டிகை அரசு உயர்நிலைப் பள்ளி, உடற்கல்வி ஆசிரியர், ரவிச்சந்திரன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவரது குடும்பத்திற்கு உதவ, அரசுப் பள்ளிகளின், உடற்கல்வி ஆசிரியர்கள், நிதி திரட்டினர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், ஆஞ்சலோ இருதயசாமி, ஆசிரியக் குழுவினருடன், 1.36 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, குடும்பத்தினரிடம் வழங்கினார்.கொரோனா விழிப்புணர்வு பேரணிசெங்கல்பட்டு: செங்கல்பட்டு தீயணைப்புத் துறை சார்பில், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணி, செங்கல்பட்டில் நேற்று நடந்தது.மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலர் குமார் பங்கேற்று, தீயணைப்பு அலுவலகத்தில் இருந்து, விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். ஜி.எஸ்.டி., சாலை வழியாக, ராட்டிங்கிணறு அருகில், நிறைவடைந்தது.இதில், பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். வெளியிடங்களுக்கு செல்லும்போது, சமூக இடைவெளி, அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் பிற வாகனங்களில் செல்லும்பொது, முககவசம் அணிய வேண்டும் என, துண்டு பிரசுரங்களை, பொதுமக்களுக்கு வழங்கினர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X