சூரிய ஒளியில் நடைபயிற்சி செய்வது எலும்புகள் உறுதி பெற அவசியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
03:25

சென்னை : ''சர்க்கரை நோயாளிகளுக்கு, எலும்பு திண்ம குறைபாடு பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது,'' என, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையின், மூட்டு, தசை, இணைப்பு திசு சிகிச்சை துறை தலைவர் தமிழ்செல்வம் கூறினார்.



உலக எலும்பு புரை விழிப்புணர்வு தினம், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், நேற்று முன்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.அப்போது, தேரணிராஜன் கூறியதாவது:எலும்பு திண்ம குறைபாடு அல்லது எலும்பு புரை நோய் குறித்த விழிப்புணர்வு, சமூகத்தில் போதியளவில் இல்லை. கால்சியம் மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறையால், பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை தடுக்க, கால்சியம் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது, சூரிய ஒளியில் நடைபயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், கொரோனா காலத்திலும், எலும்பு, மூட்டு பிரச்னைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.



மருத்துவமனையின், மூட்டு, தசை, இணைப்பு திசு சிகிச்சை துறை தலைவர் தமிழ்செல்வம் கூறியதாவது:உலகளவில், 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு, எலும்பு புரை எனப்படும் பாதிப்பு உள்ளது. எலும்பு சார்ந்த மற்ற எல்லா பாதிப்புகளுக்கும், அறிகுறிகளை காண முடியும். ஆனால், எலும்பு புரை நோயானது, எந்த அறிகுறிகளும் இல்லாமல், முதுகெலும்பு மற்றும் இடுப்பு மூட்டு பகுதிகளில், பிரச்னையை ஏற்படுத்த கூடியது.சர்க்கரை நோயாளிகள், அதீத புகை பழக்கம், மதுப்பழக்கம் கொண்டவர்கள், மாதவிடாய் நின்றவர்கள் உள்ளிட்டோருக்கு, பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில் இருப்பவர்கள், அவ்வப்போது எலும்பு திண்ம பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.



அதனை உரிய நேரத்தில் கவனிக்காமல் விட்டால், எலும்பு முறிதல், முதுகு வளைதல் பாதிப்புகள் ஏற்படலாம்.எனவே, 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், எலும்பு புரை பிரச்னை வருவதற்கான பழக்க வழங்கங்களை கொண்டவர்கள், கால்சியம் மருந்துகள், வைட்டமின் டி மருந்துகளை, டாக்டரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்வது அவசியம். அதேபோல், காலை, 7:00 மணிமுதல், 10:௦௦ மணி வரை, மாலை, 4:00 மணிமுதல், 6:00 மணிவரை, சூரிய ஒளி உடலில் படுவதால், 'வைட்டமின் டி' உடலுக்கு கிடைக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X