நாளிதழ்கள் வாசிக்க அனுமதி வேண்டும் நுாலகங்களை முழு நேரம் திறக்க கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
03:55

செங்குன்றம் : கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தளர்வுகள் அளிக்கப்பட்ட நுாலகங்கள், பகுதி நேரமாக திறக்கப்பட்டு, புத்தகங்கள் மட்டும் எடுத்துச் செல்ல, அரசு அனுமதித்துள்ளது.



நுாலகங்களை, முழு வேலை நேரம் வரை திறந்தால், தினமும் நுாலகத்திற்கு சென்று, நாளிதழ் அவற்றின் இணைப்பிதழ் மற்றும் வார இதழ்களை வாசிப்போருக்கு வசதியாக இருக்கும். சமூக இடைவெளி மற்றும் கூடுதல் தளர்வுகளுடன், பாதுகாப்பு வழிகாட்டுதல்படி, நுாலகங்களை திறக்க, அரசு அனுமதிக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, செங்குன்றம் அரிசி வியாபாரி பி.எஸ்.வி., திருநாவுக்கரசு, 54, கூறியதாவது:பள்ளி, கல்லுாரி நாட்களில் இருந்தே, நுாலகத்திற்கு சென்று, நாளிதழ்களை வாசிக்கும் பழக்கம் உள்ளது. ஊரடங்கு எதிரொலியால், ஐந்து மாதங்களாக நுாலகத்திற்கு செல்ல முடியாத நிலை இருந்தது.காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை இயங்கிய நுாலகங்கள், மதியம், 2:00 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பகுதி நேர நுாலகங்கள், காலை, 8:00 மணி முதல், மதியம், 12:30 மணி வரை மட்டுமே திறக்கப்படுகின்றன. ''




இப்போது, சில தளர்வுகளால், நுாலக உறுப்பினர்கள் மட்டும், புத்தகங்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். உறுப்பினர் அல்லாத மற்ற வாசகர்கள், நுாலகத்திற்கு சென்று பத்திரிகை, புத்தகங்கள் வாசிக்க முடிவதில்லை.அனைவரும் நுாலகம் சென்று, வாசிக்க வசதியாக, 30 பேர் அமரக்கூடிய நுாலகத்தில், சமூக இடைவெளியுடன், 15 பேருக்கு அனுமதி அளிக்கலாம். அதில், நாளிதழ்கள் வாசிப்போருக்கு, ஒரு மணி நேரம் அனுமதி அளித்து, அவர்கள் வெளியே சென்ற பின், அடுத்தவர் உள்ளே வர அனுமதிக்கலாம்.அதற்காக, டோக்கன் முறையை செயல்படுத்தி, அதில், அவர் நுாலகத்திற்குள் வர வேண்டிய நேரத்தை குறிப்பிடலாம்.



இதனால் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.மோரை ஊராட்சியைச் சேர்ந்த தனியார் ஊழியர் கே.இளமாறன், 35 கூறியதாவது:கிராமங்களில், தினசரி நாளிதழ்களை வாங்க முடியாத பலரும், நுாலகத்திற்கு சென்று, அவற்றை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதற்காக, நுாலகத்தை முழு நேரம் திறந்து, அரசு அறிவுறுத்தி உள்ள, சமூக இடைவெளியுடன், வாசகர்கள் வந்து, செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், நுாலகங்கள் முழு நேரம் இயங்கினால், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கல்விக்கு உதவும். குறிப்பாக, கொரோனா விழிப்புணர்வு, பள்ளி, கல்லுாரி திறப்பு குறித்த செய்திகளை, அவர்கள், நாளிதழ்கள் மூலம், தினமும் அறிந்து கொள்ள முடியும்.



குறிப்பாக, 'ஆன்லைன்' கல்வி கற்றாலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., நீட் போன்ற தேர்வுகளுக்கான குறிப்புகளை, புத்தகங்களில் இருந்து எடுக்கவும், வாசிப்பு பழக்கத்தை தொடரவும் உதவியாக இருக்கும்.தினமும், மதியம், 2:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மாணவர்கள் மட்டும் வந்து, செல்ல நேரம் ஒதுக்க வேண்டும். அப்போது, 15 மாணவர்களுக்கு, தலா, ஒரு மணி நேரம் என ஒதுக்கினால், தினமும், 45 மாணவர்கள், சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்புடன், நுாலகத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.ஐந்து மாதங்களாக திறக்கப்படாத நுாலகங்களில் உள்ள, மின் பயன்பாட்டிற்கான பேட்டரி, இன்வெர்ட்டர் மற்றும் மின் விசிறி போன்ற உபகரணங்கள், பழுதடைந்துள்ளன. நுாலகங்களை முழு நேரம் திறப்பதற்குள், அவற்றையும் சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X