தலைவாசல்: ஆயுதபூஜை நெருங்குவதால், சாம்பல் பூசணி, தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ஆயுத பூஜை நெருங்கிய நிலையில், சேலம் மாவட்டம், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில், பூஜைக்கு தேவையான தேங்காய், சாம்பல் பூசணி, பொறி, கடலை, வெல்லம், வாழைப்பழம், வாழைக்கன்று ஆகிய பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. சாம்பல் பூசணி கிலோ, 15 ரூபாய்க்கு விவசாயிகள் விற்கின்றனர். அதேபோல், வாழைத்தார் சிறியது, 150 முதல், 200 ரூபாய், பெரியது, 450 முதல், 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தேங்காய் அளவுக்கேற்ப, 15 முதல், 30 ரூபாய் வரை விற்கிறது. பூஜைக்கு ஓரிரு நாள் உள்ள நிலையில், பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்பதால், பலர், தற்போதே பூஜை பொருட்களை வாங்க தொடங்கியுள்ளனர்.