வீடுகளை காலி செய்ய அவகாசம்: பொதுமக்கள் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
09:41

திருச்செங்கோடு: திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வரர் மலையை சுற்றி, கிரிவல பாதை அமைக்கும் பணியை அரசு நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கிரிவலப் பாதையை சுற்றி,400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அங்கு, 40 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வசிக்கின்றனர். கடந்த, மூன்று மாதங்களுக்கு முன், நெடுஞ்சாலைத் துறை சார்பாக அளவீடுகள் எடுக்கப்பட்டு சாலையில் இருந்து, 100 அடி தொலைவிற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என, தெரிவிக்கப்பட்டது. கொரோனா வந்த காலகட்டத்தில் இந்த அறிவிப்பு வந்ததால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்தனர். கலெக்டர், ஆர்.டி.ஓ.,விடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தினந்தோறும் வீடுகளுக்கு சென்று, 'எப்போது வீட்டை காலி செய்கிறீர்கள்' என, ஊழியர்கள் கேட்பதாக கூறப்படுகிறது. எனவே, கொரோனா காலகட்டத்தில் வேறு பகுதிக்கு செல்வது சிரமமான காரியம்; 20 அடி தூரத்திற்கு கிரிவலப் பாதை அமைப்பதற்கு, 100 அடி தொலைவிற்கு நிலத்தை எடுப்பது தேவையற்றது. மேலும், தக்க ஏற்பாடுகள் செய்ய ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தங்களுக்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும்; தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X