மாயமான சிறுவன் கொன்று புதைப்பு : மரக்காணம் அருகே வாலிபர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
14:28

மரக்காணம் : மரக்காணம் அருகே சூதாட்டத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பள்ளி மாணவரைக் கொலை செய்து புதைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.



விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் மீனவ கிராமத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன் பொழுது போக்கிற்காக சூதாட்டம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, கோவிந்தராஜ் மற்றும் கலைமணி ஆகிய இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கலைமணி மகன் அபினேஷ், 20; கோவிந்தராஜை தாக்கி விட்டு,' உனது மகனைக் கொலை செய்து விடுவேன்' என கூறிச் சென்றுள்ளார்.


இந்நிலையில், கடந்த 9ம் தேதி கோவிந்தராஜ், எட்டாம் வகுப்பு படிக்கும் தனது மகன் தேவன்ராஜை, 13; காணவில்லை என மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், தேவன்ராஜ் பயன்படுத்திய மொபைல் போன் சிக்னல் அதே பகுதியில் உள்ள சவுக்கைத் தோப்பில் கடைசியாக 'கட்' ஆனது தெரியவந்தது.


இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் பேரில் கலைமணி மகன் அபினேஷிடம் விசாரணை நடத்தினர். அதில், 'எனது தந்தை கலைமணிக்கும், தேவன்ராஜ் தந்தை கோவிந்தராஜிக்கும் முன்விரோதம் இருந்தது. அதனால் நான், தேவன்ராஜை அடித்துக்கொலை செய்து சவுக்கைத் தோப்பில் புதைத்தேன்' என தெரிவித்துள்ளார்.இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து அபினேஷை கைது செய்தனர்.


மேலும் நேற்று, தேவன்ராஜ் புதைக்கப்பட்ட இடத்திற்குச் சென்று உடலைத் தோண்டி எடுக்க நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால், அப்பகுதியில் கன மழை பெய்ததால் உடலை இன்று தோண்டி எடுக்க இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
23-அக்-202006:40:37 IST Report Abuse
Thanu Srinivasan அபினேஷின் தந்தை கலைமணிக்கும் கொலை செய்யபட்ட. தேவராஜின் தந்தை கோவிந்தராஜுக்கும் ஏற்பட்ட மோதல் ஆறு மாதத்திற்கு முந்தியது. கொலை செய்த அபினேஷ் எந்தவிதத்திலும் நேரடியாக பாதிக்கபவில்லை. கொலை செய்யபட்ட சிறுவன் கலைமணி-கோவிந்தராஜ் தகராறிற்கு எவ்விதத்திலும் காரணம் இல்லை. எனவே அபினேஷ் செய்தது நிதானமாக திட்டமிடப்பட்டு செய்யயபட்ட. கொடூர கொலையாகும். (Preplanned, intentional, cold blooded murder). இவனுக்கு மரண தண்டனையே வழங்க வேண்டும். வழங்குமா? ஸந்தேகம்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X