பட்டாம்பூச்சிகளின் சரணாலயம் கோவை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
15:48


கோவை : கோவை மாவட்டத்தில், 276 வகை பட்டாம்பூச்சிகள் உள்ளன; அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில், 1,060 பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்ந்துள்ளன.


தமிழகத்தில், ஆண்டுதோறும், மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையே, இரண்டு முறை பட்டாம்பூச்சி இடம்பெயர்வு நடக்கிறது. தென்மேற்கு பருவ மழை தீவிரமடையும்போது, பட்டாம்பூச்சிகள், மேற்கு தொடர்ச்சி மலையின் நீலகிரி, சிறுவாணி, ஆனைமலையில் இருந்து, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஏற்காடு, பச்சமலை, கொல்லிமலை, கல்வராயன் மலைகளுக்கு செல்கின்றன. பருவமழைக்கு முன், மே, ஜூன் மாதங்களில் இந்த இடம்பெயர்வு நடக்கிறது.தென்மேற்கு பருவமழையின்போது இந்த பட்டாம்பூச்சிகளுக்கான போதுமான உணவு, இருப்பிடத்தை கிழக்கு தொடர்ச்சி மலைகள் வழங்குகின்றன. அங்கு இடம்பெறும் பட்டாம்பூச்சிகள் முட்டையிட்டு, அடுத்த தலைமுறையை உருவாக்கி மறைந்துவிடும்.


அடுத்த தலைமுறை பட்டாம்பூச்சிகள், செப்., அக்., மாதங்களில் வடகிழக்கு பருவமழைக்கு முன், கிழக்கு தொடர்ச்சி மலைகளில் இருந்து, மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு பயணிக்கின்றன. இது, ஒரு ஆண்டில் நடக்கும் இரண்டாவது இடம்பெயர்வு.


இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பு தலைவர் பாவேந்தன் கூறியதாவது:


எட்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பின், இந்தாண்டு முன்கூட்டியே பட்டாம்பூச்சி இடம்பெயர்வு நடந்துள்ளது. செப்., அக்., மாதங்களில் நடக்கும் இடம்பெயர்வு இந்தாண்டு ஆக., இறுதி வாரத்தில் துவங்கி செப்., முதல் வாரம் வரை நடந்துள்ளது. ஆக., 25ல் ஒரு மணி நேரத்தில், 1,060 பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்ந்துள்ளன. இது இந்தாண்டின் அதிகபட்சமாக பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை.ஒவ்வொரு பிரிவு பட்டாம்பூச்சிகளும் ஒரு தனிப்பட்ட பாதையில் பயணித்து குறிப்பிட்ட பகுதியில் தங்கி மீண்டும் தங்களின் பயணத்தை துவங்கும்.


தமிழகத்தில், 325 பட்டாம்பூச்சி வகைகள் இருக்கின்றன. இதுவரை, 316 பட்டாம்பூச்சி வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. காடுகள்,ஈர நிலங்கள், புல்வெளிகள், ஆறுகள் என்று பட்டாம்பூச்சிகள் வாழ தேவையான அனைத்து சூழலையும் கொண்ட கோவை மாவட்டத்தில், 276 பட்டாம்பூச்சி வகைகள் இருக்கின்றன.கோவையில் சிறுவாணி மலை, கல்லாறு, டாப் சிலிப், வால்பாறை, பொன்னுாத்து, ஆனைகட்டி, வாலையாறு, காரமடை, முள்ளி ஆகியஇடங்களில் பல்வேறு வகையான, அதிகளவு பட்டாம்பூச்சி இனங்கள் வாழ்ந்து வருகின்றன.


இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X