அன்னூர்:ஜனசேவா சார்பில், 10 ஆயிரம் குடும்பங்களுக்கு, ஓமியோ மருந்து வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்.எஸ்.எஸ்., சேவா பாரதி உடன் இணைக்கப்பட்ட ஜன சேவா தொண்டு நிறுவனம் சார்பில், மகளிர்குழு உறுப்பினர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் அன்னூரில் நடந்தது. இதில் அமைப்பின் தலைவர் ராஜேந்திரன் பேசுகையில், ''அன்னூர் ஒன்றியத்தில், முழு ஊரடங்கின்போது, 20,000 பேருக்கு, ஜன சேவா சார்பில், உணவு வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பரவலைத் தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய ஓமியோ மருந்து, 'ஆர்சனிக் ஆல்பம் 30 சி' வீடு, வீடாக, வழங்கப்படுகிறது.''அன்னூர், எஸ்.எஸ்.குளம் ஒன்றியங்களில், 10,000 வீடுகளில், இம்மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஓமியோ மருந்து தேவைப்படுவோரும், மருந்து வாங்கித் தர கூடியவர்களும், ஜன சேவா அமைப்பை, 97869 44195 என்னும் மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.